கெஹலியவிடமிருந்து சுகாதார அமைச்சர் பதவி பிடுங்கப்பட்டது: அமைச்சரவையில் மாற்றம்

🕔 October 23, 2023

மைச்சரவையில் இன்று (23) மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைய , விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மகிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சற்று நேரத்துக்கு முன்னர், ஜனாதிபதி செயலகத்தில் அந்தப் பதவியை அவர் பெற்றுக்கொண்டார்.

ஹாபிஸ் நசீர் அஹமட் முன்னர் சுற்றாடல் அமைச்சராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சராக கெஹலிய பதவி வகித்த போது, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டமை நினைவு கொள்ளத்தக்கது. மேலும், சுகாதார அமைச்சராக அவர் மீது பாரிய குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டிருந்தன.

இதேவேளை டொக்டர் ரமேஷ் பத்திரண அவர் வகிக்கும் கைத்தொழில் அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக சுகாதார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நிதி ராஜாங்க அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக தோட்டத் தொழில் முயற்சிகள் ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்