காஸாவில் கடந்த 02 தசாப்தங்களில், இந்த ஆண்டு அதிக உயிரிழப்பு: புள்ளி விபர பணியகம்

🕔 October 16, 2023
காஸா நகரில் உள்ள ஷிஃபா வைத்தியசாலையில் சிவில் அவசரகால குழு உறுப்பினர்கள், இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட தங்கள் சக ஊழியர்களில் ஒருவரின் உடலுக்கு அருகில் பிரார்த்தனை செய்கிறார்கள்

காஸா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் – இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 3,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று பலஸ்தீனிய மத்திய புள்ளி விபர பணியகம் தெரிவித்துள்ளது.

இந்தக் கொலைகளில் தொண்ணூறு சதவிகிதமானவை – ஹமாஸின் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலால் மேற்கொண்ட குண்டு வீச்சின் போது நிகழ்ந்தவையாகும்.

இரண்டு தசாப்தங்களில் இந்த இறப்பு எண்ணிக்கை மிக அதிகமானது என, அந்த பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும் காஸா பற்றிய பின்வரும் புள்ளிவிவரங்களையும் அது வெளியிட்டது:

வேலையின்மை விகிதம்: 45 சதவீதம் (2023 முதல் பாதியில்)
வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு: 80 சதவீதம்
பாலஸ்தீனிய பிராந்தியங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்பு:18 சதவீதம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்