மீண்டும் எரிபொருளுக்கான QR முறைமை வருகிறதா: அமைச்சர் கஞ்சன பதில்

🕔 October 16, 2023

ரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான கியுஆர் (QR) முறையை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றதாக வெளியான செய்திகளை, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மறுத்துள்ளார்.

தேசிய எரிபொருள் கடவு (QR) முறையையோ அல்லது எரிபொருளுக்கான எந்த ஒதுக்கீட்டு முறையையோ மீண்டும் அறிமுகப்படுத்த – அரசாங்கமோ, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அல்லது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமோ எந்த ஒரு கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை என, ட்விட்டரில் அமைச்சர் கஞ்சன குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த 12 மாதங்களுக்கான எரிபொருள் தேவைகளை திட்டமிடுவதற்கு மட்டுமே அமைச்சு, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றுாலியக் களஞ்சிய முனையம் ஆகியவை கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ, முத்துராஜவெல முனையங்கள் மற்றும் பிராந்திய களஞ்சியசாலைகளில் தற்போதுள்ள சேமிப்புத் திறன்களை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கியுஆர் (QR) முறையை மீண்டும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கூறி – உள்ளூர் ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சரின் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த மாதத்திலிருந்து (செப்டம்பர்) தேசிய எரிபொருளுக்காக கியுஆர் முறைமையை அரசாங்கம் நிறுத்தியது.

2022 இல் இலங்கையில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியைத் தொடர்ந்து, எரிபொருள் கொள்வனவுக்காக கியஆர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்