இஸ்ரேல் எல்லையில் கைது செய்யப்பட்ட இலங்கைப் பெண்களை, மீளவும் ஜோர்தான் அனுப்ப தீர்மானம்

🕔 October 16, 2023

ஸ்ரேலிய எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த போது – இரண்டு நாட்களுக்கு முன்னர் இஸ்ரேல் மற்றும் ஜோர்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கைப் பெண்கள், மீண்டும் ஜோர்தானுக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் உள்ள இலங்கை தூதரகத்தின் தகவலின்படி, இரண்டு இலங்கையர்களும் ஜோர்தான் எல்லை வழியாக சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைந்துள்ளனர்.

இரு பெண்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார், ஒருவர் 50 வயதுடையவர் மற்றும் மற்றவர் 44 வயதுடையவர்.

இரண்டு பெண்களையும் ஜோர்டானுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தூதுவர் பண்டார மேலும் தெரிவித்தார்.

மேலும், இரு பெண்களின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால விவகாரங்கள் தொடர்பாக, இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம், ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்து செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேலும் பாலஸ்தீனமும் மோதலில் ஈடுபட்டிருந்த நேரத்தில்ஈ இரண்டு பெண்களும் சட்டவிரோதமாக இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவர் தற்போது இடம்பெற்று வரும் மோதலில் உயிரிழந்துள்ளதாகவும், மற்றுமொரு பெண் காணாமல் போனதாகவும், ஆண் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தெற்கு காஸாவில் உள்ள மூன்று இலங்கை குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக – பாலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதிகள் நேற்று (15) தெரிவித்துள்ளனர்காஸாவிலிருந்து வெளியேறுமாறு செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதிநிதிகள் மேலும் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்