24 மணி நேரத்துக்குள் வடக்கு காஸாவிலுள்ள 11 லட்சம் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கெடு: பேரழிவை ஏற்படுத்தும் என ஐ.நா எச்சரிக்கை

🕔 October 13, 2023
இஸ்ரேலின் தாக்குதலையடுத்து பலஸ்தீனர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி, தெற்கு காஸாவிலுள்ள ரஃபா அகதிகள் முகாமுக்குச் செல்கின்றனர்

னைத்து பாலஸ்தீனியர்களும் 24 மணி நேரத்திற்குள் வடக்கு காஸாவை விட்டும் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் கெடு விதித்துள்ளது. இதன் காரணமாக சுமார் 11 லட்சமம் மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டும் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் காஸா பகுதியின் வடக்குப் பகுதியில் இருந்து மக்களை அகற்றும் இஸ்ரேலின் திட்டம், பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஐ.நா எச்சரித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் காஸா நகரில் குறிப்பிடத்தக்க ராணுவ நடவடிக்கைகள் நடைபெறும் என்றும் காஸாவின் வடக்கிலுள்ளோர் தெற்கே செல்ல வேண்டும் என்றும் இஸ்ரேஸ் அறிவித்துள்ளது.

அதேவேளை, இஸ்ரேலிய படைகள் அனுமதித்தால் மட்டுமே, காஸா வடக்கிலிருந்து இடம்பெயர்வோர் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியும் என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது.

மறுபுறத்தே, காஸா மீதான இஸ்ரேலிய தரைப்படை ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் திறன் தமக்கு உள்ளதாக ஹமாஸின் ராணுவப் பிரிவான ‘அல்-கஸ்ஸாம் பிரிகேட்ஸ்’,கொண்டது என்று தெரிவித்துள்ளது.

இதேவேளை காஸா மற்றும் லெபனானில் – இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளின்போது ‘வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளை’ பயன்படுத்தியதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், போர் ‘மற்ற முனைகளில்’ திறக்கப்படலாம் என்று – ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமிர் அப்துல்லாஹியன் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிய குண்டுவீச்சு காரணமாக 423,000 க்கும் அதிகமான மக்கள் இப்போது காஸாவில் உள்ள தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

சுமார் 23 லட்சம் மக்கள் வசிக்கும் காசா பகுதி 41கி.மீ. நீளமும் 10கி.மீ. அகலமும் கொண்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்