பொலிஸ் பரிசோதகரின் கொலைச் சந்தேக நபர், அதிரடிப் படையின் துப்பாக்கிச் சூட்டில் பலி

🕔 October 12, 2023

விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில், பாதாள உலக உறுப்பினர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெல்வத்த – மீட்டியகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பாதாள உலக உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது, ​​வீட்டில் பதுங்கியிருந்த சந்தேக நபர் – துப்பாக்கியால் அதிரடிப்படையினரை நோக்கி சுட்டுள்ளார்.

தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் போது சந்தேக நபர் சுடப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நபர், அண்மையில் காலி – கராகொட பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் பொலிஸ் பரிசோதகர் தெடிமுணி பாலேந்திரசிங்கவின் கொலைச் சம்பவத்தின்  சந்தேக நபர்களில் ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்