பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்புக் காலம் இன்றுடன் நிறைவு

🕔 October 9, 2023

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட மூன்று மாத கால நீடிப்பு இன்று (09) முடிவடைகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த சேவை நீடிப்பை – ஜூன் 09 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் வழங்கியிருந்தார்.

இலங்கையின் 35வது பொலிஸ் மா அதிபராக 2020 நொவம்பரில் நியமிக்கப்பட்ட சி.டி. விக்கிரமரத்ன, மார்ச் 25 அன்று ஓய்வு பெறவிருந்தார். எனினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவருக்கு மூன்று மாத சேவை நீடிப்பை வழங்கினார்.

முதல் சேவை நீட்டிப்பு முடிந்ததும், இரண்டாவது சேவை நீடிப்பு ஜூன் 09 முதல் மேலும் மூன்று மாதங்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு மேலும் சேவை நீடிப்பு வழங்குவதா அல்லது வேறு ஒருவரை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்