டெங்கு: இந்த வருடத்தில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எத்தனை பேர் தெரியுமா?

🕔 September 23, 2023

டெங்கு நோயினால் இவ்வருடத்தில் மொத்தமாக சுமார் 64 ஆயிரம் போர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போதைய செப்படம்பர் மாதம் மட்டும் 2,300 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளர்.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையே அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கைக்கு காரணம் என சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும் கடந்த சில மாதங்களாக பதிவானதை விட இந்த எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, 2023ஆம் ஆண்டு மொத்தமாக 63,881 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதற்கிடையில், டெங்கு நோய்க்கான அதிக ஆபத்துள்ள வலயங்களின் எண்ணிக்கை 07 வலயங்களாகக் குறைக்கப்பட்டுள்ள போதிலும், தொற்றுநோய்கள் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்