ஞானசாரர் விளக்க மறியலில்

🕔 January 26, 2016

Gnanasara - 012பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று செவ்வாய்கிழமை காலை ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.

இந்த நிலையிலேயே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டார்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போகச்செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்ற வேளையில் ஞானசார தேரர் அரச அதிகாரிகளை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவரை கைதுசெய்யுமாறு ஹோமாகம நீதவான் உத்தரவிட்டார்.

பிரகீத் எக்னெலிகொட காணாமல் போகச்செய்யப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள அரச புலனாய்வு அதிகாரிகளை விடுவிக்கவேண்டும் என்பதே ஞானசார தேரரின் கோரிக்கையாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்