சோளத்துக்கான இறக்குமதி தீர்வை குறைப்பு: கால்நடைத் தீவன விலையை குறைப்பதற்கான நடவடிக்கை

🕔 August 18, 2023

சோளத்துக்கான இறக்குமதி வரியை அரசாங்கம் குறைத்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஒரு கிலோகிராம் சோளத்தின் இறக்குமதி வரி 75.00 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை (17) முதல் இந்த வரிக்குறைப்பு அமுலுக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்காச்சோளத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் கால்நடைத் தீவனத்தின் விலையைக் குறைக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்