13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு அழைப்பு

🕔 August 4, 2023

ரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பான பரிந்துரைகளையும் முன்மொழிவுகளையும் வழங்குமாமறு கட்சித் தலைவர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் 15-08-2023 ஆம் திகதிக்கு முன்னதாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் பரிந்துரைகளையும் முன்மொழிவுகளையும் பெற்றுத்தருமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கட்சிகள் மற்றும் குழுக்களின் தலைவர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் 26-07-2023 அன்று – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கூட்டப்பட்டிருந்த சர்வகட்சி மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களுக்கு அமைவாக ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் மேற்படி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்