முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அங்கீகரிக்கப்படாத சலுகைகள் வழங்கப்படுகிறதா: சிரேஷ்ட அதிகாரி விளக்கம்

🕔 July 26, 2023

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சில சலுகைகள் அங்கீகரிக்கப்படாதவை என்பதால் அவை நிறுத்தப்பட வேண்டும் எனும் செய்திகள் வெளியாகியுள்ளதை அடுத்து, இந்த விடயம் கணக்காய்வு மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதோடு – நீதித்துறையும் இதுதொடர்பில் தீர்ப்பளிக்க வேண்டும் என, ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

“அவ்வாறானதொரு விடயம் இடம்பெற்றிருந்தால், அது கணக்காய்வு மற்றும் நீதிமன்றங்களுக்குரிய விடயமாகும்” என, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான அதிகாரி டெய்லி மிரருக்குத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் சிறப்புரிமைச் சட்டத்தை மீறி – சில முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களைஅரசாங்கம் செலுத்தியதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு – ஓய்வூதியம், உத்தியோகபூர்வ இல்லம், மூன்று வாகனங்களுக்கான எரிபொருள் மற்றும் தனிப்பட்ட செயலாளர் போன்றவற்றை சட்டப்பூர்வமாக பெறுவதற்கான உரிமை உள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்