டெங்கு பாதிப்பு சர்வதேச ரீதியாக அதிகரிப்பு: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

🕔 July 22, 2023

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகமாகும் என, உலக சுகாதார நிறுவனம் நேற்று வெள்ளிக்கிழமை எச்சரித்துள்ளது.

புவி வெப்பமடைதல் காரணமாக, நுளம்புகள் பரவுவதாகவும், அதனால் டெங்கு விகிதம் உலகளவில் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ள அந்த நிறுவனம், 2000ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை, 4.2 மில்லியனாக டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் சூடானின் தலைநகரான கார்ட்டூமில் இந்த நோய் முதன்முறையாக கண்டறியப்பட்டது, அதே நேரத்தில் ஐரோப்பா டெங்கு நோய் அதிகரித்துள்ளதாகவும், பெரு நாட்டில் பெரும்பாலான பிராந்தியங்களில் அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

டெங்கு உலகில் மிக வேகமாக பரவும் வெப்பமண்டல நோய் என்றும், இது ஒரு ‘தொற்றுநோய் அச்சுறுத்தலை’ கொண்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் ஜனவரியில் எச்சரித்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்