பிக்குவையும் பெண்களையும் நிர்வாணமக்கி தாக்கியோர் கைது: வீடியோவை வெளியிட்ட நபரை அடையாளம் காணும் விசாரணை ஆரம்பம்

🕔 July 8, 2023

பௌத்த பிக்கு ஒருவரையும் பெண்கள் இருவரையும் நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்தியமை தொடர்பில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியது.

இதன்படி, நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார், மற்றைய சந்தேக நபர்கள் இன்று (08) காலை நவகமுவ பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மேலும், சர்ச்சைக்குரிய வீடியோவை முதலில் சமூக ஊடகங்த்தில் பதிவேற்றிய நபரை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

பௌத்த பிக்குவையும் இரண்டு பெண்களையும் நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்தியோரை கைது செய்யுமாறு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: பௌத்த பிக்கு மற்றும் இரு பெண்களை நிர்வாணப்படுத்தி தாக்கியவர்களை கைது செய்யுமாறு உத்தரவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்