பௌத்த பிக்கு மற்றும் இரு பெண்களை நிர்வாணப்படுத்தி தாக்கியவர்களை கைது செய்யுமாறு உத்தரவு

🕔 July 8, 2023

பௌத்த பிக்கு ஒருவரையும் இரண்டு பெண்களையும் நிர்வாணமாக்கி தாக்கிய நபர்களை கைது செய்யுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவிய காணொளியில், ஆண்கள் குழுவொன்று பொளத்த பிக்கு ஒருவரையும், இரண்டு பெண்களையும் ஆடைகளைக் கழற்றிய பின்னர் பொல்லுகளால் தாக்குகின்றனர்.

அந்த வீடியோவில், அந்த குழுவினர் பௌத்த பிக்குவையும் நிர்வாணப்படுத்தி தாக்குகிறது.

இந்த நிலையில் சட்டத்தை கையில் எடுத்து – பிக்கு மற்றும் இரு பெண்களை தாக்கிய சந்தேக நபர்களை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு மேல்மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் நவகமுவ பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.

இரண்டு பெண்களுடன் குறித்த பௌத்த பிக்கு – படுக்கையில் இருந்த போது மேற்படி குழுவினரால் பிடிக்கப்பட்டு இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் இவர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து, சமூக ஊடகங்களில் பதிவுகள் எழுதப்பட்டுள்ள நிலையில், செய்திகள் மற்றும் காட்டூன்களும் வெளியாகியுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்