கிழக்கில் ஆங்கில டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்: ஆளுநர் வழங்கினார்.

கிழக்கு மாகாணத்தில் தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளோமா கற்கைநெறியை நிறைவுசெய்துள்ள 48 டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் – இன்று (08) இந்த நியமனங்களை வழங்கினார்.
2017ஆம் ஆண்டு தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளோமா கற்கைநெறியை நிறைவுசெய்த ஆங்கில டிப்ளோமாதாரிகள், கிழக்கு மாகாணத்தின் உரிய அதிகாரிகளிடம் தங்களது நியமனம் தொடர்பிலான கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
இந்த நிலையில், ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய அவர்களுக்கு இன்று ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.