ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின் விநியோகம் இன்று துண்டிக்கப்படும்

🕔 July 4, 2023

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின்சார விநியோகம் இன்று (04) துண்டிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான ஒப்பந்தத்தை கடைபிடிக்கவில்லை என்பதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

ரூபவாஹினி தற்போது இலங்கை மின்சார சபைக்கு 25 மில்லியன் ரூபாவை நிலுவையாக செலுத்த வேண்டியுள்ளது. இதேவேளை ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கும் ரூபவாஹினி கூட்டுத்தாபனம் கிட்டத்தட்ட 27 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது..

இருந்தபோதிலும் ரூபவாஹினின் முன்னாள் தலைவைர் டப்ளியு.பி. கனேகல – தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக, அவ்வப்போது மின்சார சபையிடமிருந்து சலுகைகளை பெற்றுக் கொண்டார்.

தற்போது, ரூபவாஹியின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகிய இரண்டு உயர் பதவிகளும் வெற்றிடமாக உள்ளன,

Comments

புதிது பேஸ்புக் பக்கம்