மாணவர்களுக்கான வட்டியில்லாக் கடன்: விண்ணப்பங்கள் நாளை தொடக்கம் ஏற்றுக் கொள்ளப்படும்

🕔 July 3, 2023

யர்தரப் பரீட்சையை 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நிறைவு செய்த 5,000 மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளை (04) ஆரம்பிக்கப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கடனைப் பெறும் மாணவர்கள் வேலை சார்ந்த படிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க 5,000 மாணவர்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கும் திட்டத்துக்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், அது கல்வி அமைச்சினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“விண்ணப்பதாரர்கள் ஜூலை 04 முதல் ஓகஸ்ட் 07 வரை விண்ணப்பிக்கலாம். இது உயர்கல்வியின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையாகும். இந்தக் கடன்களுக்கான வட்டி முழுவதையும் அரசே செலுத்துகிறது. வேலை சார்ந்த படிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 90% க்கும் அதிகமான மாணவர்கள் பட்டப்படிப்பு முடிந்த உடனேயே வேலைவாய்ப்புக்கான தேவை உள்ள படிப்புகளைத் தொடர்ந்துள்ளனர். அதன்படி, தனியார் பல்கலைக் கழகங்களில் சிறப்புப் படிப்புகளைப் படிக்க அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுக்காக இந்தக் கடன் வழங்கப்படுகிறது” என, அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்