ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

🕔 June 15, 2023

ந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளது.

இதற்காக இன்று முதல் எதிர்வரும் ஜுலை மாதம் 06ஆம் திகதி வரை புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கமுடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின், 40 பாடவிதானங்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள், இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் உள்ள, 39 மத்திய நிலையங்களில், இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் லசித சமரகோன் தெரிவித்துள்ளார். இதற்காக, 37 அரச பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்