எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல்: வழிகாட்டல்கள் தொடர்பில் கலந்துரையாடல்

– பாறுக் ஷிஹான் –
பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல் தொடர்பில் அரசாங்கத்துக்கு மற்றும் சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கு சிபார்சு செய்யும் வழிகாட்டல்கள் தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வு கல்முனையில் இன்று (31) நடைபெற்றது.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வு – கல்முனை பிராந்திய மனித உரிமைக்குழுவின் மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கை மனித உரிமைகள் குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.சி. அப்துல் அஸீஸ் தலைமையில் இநத நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில்பொலிஸ், சுகாதாரத் துறை, கல்வித் திணைக்கள அதிகாரிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

