முஸ்லிம் சமூகத்தின் மூத்த புத்திஜீவி வை.எல்.எஸ். ஹமீட் காலமானார்

🕔 May 25, 2023

– அஹமட் –

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளரும் மூத்த அரசியல்வாதியுமான சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் இன்று (25) காலமானார்.

திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் மரணித்தார்.

கல்முனையைச் சேர்ந்த வை.எல்.எஸ். ஹமீட், முஸ்லிம் சமூகத்தில் குறிப்பிடத்தக்க புத்திஜீவியாக இருந்தார்.

தனது சமூகம் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்த இவர், முஸ்லிம்களின் சமூக, அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் மிக நீண்ட காலமாக பேசியும், எழுதியும் வந்துள்ளார்

அரசியல் யாப்புச் சட்டங்களில் வை.எல்.எஸ். ஹமீட் மிகவும் பாண்டித்தியம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் காலத்திலிருந்து அரசியலரங்களில் இயங்கி வந்த இவர், கடந்த பொதுத் தேர்தலிலும் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார்.

கொழும்பில்இன்று இஷா தொழுகையின் பின்னர் – ஜனாஷா நல்லடக்கம் இடம்பெறும் என, குடுபத்தினர் தெரிவிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்