எதிர் காலத்தில் இப்படித்தான் மின் கட்டணம் குறையப் போகிறது: முன்மொழிவை சமர்ப்பித்தார் அமைச்சர் கஞ்சன

🕔 May 24, 2023

மின் கட்டண திருத்த முன்மொழிவை அமைச்சர் கஞ்சன விஜேகேகர இன்று (24) நாடாளுமன்றத்தில் சமர்பித்தார்.

இதன்படி, 0 -3 0 வரையான அலகுக்கான விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, புதிய அலகின் விலை 25 ஆக புதிய திருத்தத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

இதேவேளை, நிலையான கட்டணத்தை 400 ரூபாவிலிருந்து 250 ரூபாவாக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது.

இதன்படி, மின்சாரக் கட்டணத்தில் முதலாம் பிரிவினருக்கு குறைந்த பட்சம் 23% சலுகை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்ளும் குடும்பங்கள் 1,744,000 என்றார்.

மேலும், 31 – 60 அலகுகளுக்கு 9% மற்றும் 0 – 60 அலகுகளுக்கு 7% மின் கட்டணம் குறைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

0 – 30 அலகுகள் வரை பயன்படுத்தும் 15,646 மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணம், ஜூலை மாதத்தில் 23% ஆக குறைக்கப்படும் என்றும், 31 – 60 அலகுகள் வரை பயன்படுத்தும் 10,692 மத வழிபாட்டுத் தலங்களுக்கு 7% மின் கட்டணத்தைக் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

உணவக பிரிவினருக்கு 29% முதல் 40% வரை மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்