கடத்தலில் கைதான அலி சப்ரி எம்.பி: எட்டரைக் கோடி ரூபா நஷ்டத்துடன் வெளியே வந்தார்

🕔 May 24, 2023

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், 78 மில்லியன் ரூபா பெறுமதியான அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் ஏனைய கைத்தொலைபேசிகளை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த குற்றத்துக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று குறித்த பொருட்களுடன் கைது செய்ப்பட்ட அலி சப்ரி ரஹீமுக்கு,7.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தங்கம் மற்றும் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி மற்றும் அபராத்தொகை என, 85.5 மில்லியம் ரூபாவை அலி சப்ரி இழந்துள்ளார்.

நேற்று துபாயில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

நாடாளுமன்றளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடமிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமிதி 74 மில்லியன் ரூபாவாகும்.

அவருடைய பயணப் பையில் இருந்த கைத்தொலைபேசிகளின் பெறுமதி 4.2 மில்லியன் ரூபாவாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் – கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டமை தொடர்பில், நேற்று நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்றதுடன், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்