பாடசாலை மாடிக் கட்டத்திலிருந்து குதித்த மாணவி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

🕔 May 10, 2023
சித்தரிப்புப் படம்

ண்டியிலுள்ள பாடசாலையொன்றின் வளாகத்திலுள்ள கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த மாணவியொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் நேற்று (09) நடந்துள்ளது.

குறித்த பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி, கட்டிடமொன்றின் முதல் மாடியில் இருந்து குதித்து காயங்களுக்குள்ளான நிலையில் கண்டி பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றதாகவும், மாணவி 15 அடி உயரத்தில் இருந்து குதித்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளதாக மவ்பிம செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த பாடசாலை மாணவி ஒரு மாணவத் தலைவர் எனவும், கட்டுகஸ்தோட்டை களுகமுவ பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்