கோதுமை, சீனி விலைகள் அதிகரிப்பு: காற்றில் பறந்தது அமைச்சரின் உறுதிமொழி

🕔 May 8, 2023

கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கோதுமை மா கிலோவொன்றின் விலை 10 ரூபாவினாலும், சீனி கிலோவொன்றின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கோதுமை மாவுக்கான இறக்குமதி வரி விலக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டதையடுத்து, அதன் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் வெள்ளை சீனி மெட்ரிக் டொன் ஒன்றின் விலை 500 அமெரிக்க டொலர்களில் இருந்து 750 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாகவே இலங்கையிலும் சீனி விலை அதிகரித்துள்ளதென்றும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

கோதுமை மாவின் இறக்குமதி வரி விலக்கு நீக்கப்பட்ட போதும், மாவின் விலையில் மாற்றம் ஏற்படாது என்று, நேற்றைய தினம் நிதி ராஜாங்க அமைச்சர ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: கோதுமை மாவுக்கு வழங்கப்பட்ட சுங்க வரி நீக்கம்: ஆனால் விலை அதிகரிக்காதாம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்