கோதுமை மாவுக்கு வழங்கப்பட்ட சுங்க வரி நீக்கம்: ஆனால் விலை அதிகரிக்காதாம்

🕔 May 7, 2023

கோதுமை மாவுக்கு வழங்கப்பட்டிருந்த சுங்க வரி நீக்கப்படும் என – நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ கோதுமை மாவுக்கு 03 ரூபா சுங்க வரி சலுகை வழங்கப்பட்டிருந்தது.

எனினும் இதன் மூலம் கோதுமை மாவின் விலையில் மாற்றம் ஏற்படாது எனவும் ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவிசாவளை பிரதேசத்தில் இன்று (7) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

அரிசிக்கு முக்கிய மாற்றீடாகவுள்ள கோதுமை மாவுக்கான சுங்க வரியை நீக்குவதன் மூலம், 90 வீதமான விவசாயிகளைப் பாதுகாக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்