மனைவியுடன் பசில் அமெரிக்கா பறந்தார்

🕔 May 7, 2023

முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ இன்று (07) அதிகாலை அமெரிக்கா பயணமானார்.

அதன்படி அவர் எமிரேட்ஸ் விமானத்தில் டுபாய் சென்றுள்ளதாகவும், அங்கிருந்து அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பசில் ராஜபக்ஷவுடன் அவரின் மனைவியும் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பசில் ராஜபக்ஷ தனது குறுகிய விஜயத்தின் பின்னர் மீண்டும் நாடு திரும்புவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்