மாகாண மட்ட விஞ்ஞான வினா விடைப் போட்டி: அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவி ஸீனத் ஸஹரா இரண்டாமிடம்

🕔 May 2, 2023

கிழக்கு மாகாண மட்டத்தில் நடைபெற்ற விஞ்ஞான வினா – விடைப் போட்டியில் (Science quiz), அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை அறபா வித்தியாலத்தைச் சேர்ந்த எம்.என். ஸீனத் ஸஹரா இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இவர் இரு மொழிக் கற்கைப் பிரிவு – தரம் 10இல் கல்வி பயில்கின்றார்.

இந்த போட்டியில் அறபா வித்தியாலயம் தரம் 09இல் கல்வி பயிலும், எம்.ஆர். சாஜித் 04ஆம் இடத்தைப் பெற்று – பாராட்டுச் சான்றிதழை வென்றுள்ளார்.

மேற்படி மாணவர்கள் இருவருக்கும் கிடைத்த சான்றிதழ்கள், இன்று (02) பாடசாலையில் அதிபர் எம்.ஏ. அன்சார் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடத்தப்படும் இந்த விஞ்ஞான வினா – விடைப் போட்டியானது (Science quiz) பல்வேறு வயதுப் பிரிவினரிடையே நடத்தப்படுகின்றது.

அந்த வகையில் இம்முறை நடந்த போட்டியில், அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்ட பாடசாலைகளில் இருந்து கலந்து கொண்ட மாணவர்களில் – அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் தரம் 07இல் பயிலும் எம்.ஐ.எப். இஃப்பத் முதலிடத்தையும், இரண்டாம் இடங்களை அறபா வித்தியாலயலயத்தைச் சேர்ந்த தரம் 10 மாணவி எம்.என். ஸீனத் ஸஹரா, அக்கரைப்பற்று அல் முனவ்வரா கனிஷ்ட வித்தியாலயம் தரம் 07ஐச் சேர்ந்த என். அஷ்ரக் அஹமட் மற்றும் பொத்துவில் அல் கலாமா வித்தியாயலயம் தரம் 06இல் பயிலும் ஏ.எல். அர்மான் அஹமத் ஆகியோர் பெற்றுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்