முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் காலமானார்: இன்று பிற்பகல் நல்லடக்கம்

🕔 May 2, 2023

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான் நேற்று (01) கண்டியில் காலமானார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (02) பிற்பகல் 3.00 மணியளவில் கண்டி – மாவில்மட முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்த இவர், அஷ்ரப் அமைச்சராகப் பதவி வகித்த காலங்களில், அவரின் அமைச்சின் கீழிருந்த நிறுவனங்களின் தலைவராக பதவி வகித்திருந்தார்.

கட்சிக்கான இவரின் கடின உழைப்புக் குறித்து – மு.காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் பகிரங்கமாக பல தடவை பாராட்டிப் பேசியுள்ளமை நினைவுகொள்ளத்தக்கது.

மு.காங்கிரஸின் தற்போதை தலைவர் ரஊப் ஹக்கீம் அமைச்சராக இருந்த காலப்பகுதிகளிலும் அவரின் கீழிருந்த திணைக்களங்களின் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் சல்மான் பதவி வகித்திருந்தார்.

இவரின் திடீர் மறைவு பல்வேறு தரப்பினரிடையே பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்