அரச ஊழியர்களில் 02 ஆயிரம் பேர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளதாக தகவல்

அரச ஊழியர்களில் சுமார் 2,000 பேர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் பொருட்டு, ஐந்தாண்டு காலத்திற்கு நீட்டிக்கப்பட்ட விடுமுறையைப் பெற்றுள்ளனர்.
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவும், அரசின் செலவினங்களைக் குறைக்கவும் முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கையைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த ஊதியமில்லாத விடுமுறையின் மூலம் – வெளிநாட்டில் பணிபுரியவோ, தொழில் பயிற்சி பெறவோ அல்லது அவர்களின் மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தவோ பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றறிக்கை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, மொத்தம் 1988 அரச ஊழியர்கள் ஏற்கனவே வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அனுமதி பெற்றுள்ளதாக – பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் சுமார் 15 லட்சம் அரச ஊழியர்கள் இருந்ததாக புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.