பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: ஐ.ம.சக்தி தீர்மானம்

🕔 April 29, 2023

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை மீதான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிதமை தொடர்பிலேயே இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

குறித்த தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தி கலந்து கொள்ளாமல் தவிர்ந்திருந்தது.

பௌசியின் இந்த நடவடிக்கை கட்சியின் தீர்மானத்துக்கு முரணானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் – அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு பௌசி நியமிக்கப்பட்டார்.

கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக முஜிபுர் ரஹ்மான் களமிறங்கும் பொருட்டு, அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்திருந்தார்.

தொடர்பான செய்தி: சர்வதேச நாணய நிதியம் தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்: பல்டியடித்தார் பௌசி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்