எரிபொருள் சில்லறை விற்பனை ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நடவடிக்கை: சீன நிறுவனம், அமைச்சர் கஞ்சன சந்திப்பு

🕔 April 26, 2023

லங்கையில் எரிபொருளை சில்லறையில் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கும் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கும் சினொபெக் நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

சீன எரிசக்தி நிறுவனமான சினொபெக் அதிகாரிகள், அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவுக்கு இடையில் நேற்று (25) அமைச்சில் நடைபெற்ற சந்திப்பில், இது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதற்கமைய மே மாதத்தின் நடுப்பகுதியில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்றும், அதன் செயல்பாடுகள் 45 நாட்களுக்குத் தொடங்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

எரிசக்தி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி, முதலீட்டுச் சபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும்இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையம் ஆகியவற்றின் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதாக அமைச்சர் கஞ்சன தனது ட்விட்டரில் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்