இளம் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்துவதில் ஆசுகவி அன்புடீன் முதன்மையானவர்: நினைவுப் பேருரை நிகழ்வில் நெகிழ்ச்சி

🕔 April 17, 2023

றைந்த கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன் அவர்களுக்கான நினைவுப் பேருரையும், இப்தார் நிகழ்வும் நேற்று (16) அட்டாளைச்சேனை பிரதே செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வு – பிரதேச செயலாளர் எம்.ஏ.சி .சாபிர் தலைமையில் நடைபெற்றது.

ஆசுகவி அன்புடீன் பற்றிய நினைவுரைகளை, மூத்த கவிஞர் கலாபூஷணம் பாலமுனை பாறுக், ஆசிரியரும் அறிவிப்பாளருமான ஒலுவில் ஜே. வஹாப்டீன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா மற்றும் ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் ஆகியோர் வழங்கினர்.

இளம் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்துவதில் ஆசுகவி அன்புடீன் எப்போதும் முதன்மையானவராகவும், முனைப்புடனும் செயற்பட்டவர் என, அங்கு உரையாற்றிய அனைவரும் நெகிழ்ந்து பேசியமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வினை கலாசார உத்தியோகத்தர் எம்.எஸ். ஜவ்பர் நெறிப்படுத்தினார்.

இந் நிகழ்வில் ஆசுகவி அன்புடீனின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் ஏற்புரையை அன்புடீனின் சகோதரர் ஈழமதி ஜப்பார் வழங்கினார்.

அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் சட்டத்தரணி நஹீஜா முஸாபிர், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக், சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல்.ஏ. மன்சூர் உட்பட கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்