பள்ளிவாசல்களின் வெளி ஒலிபெருக்கி பாவனைக்கு கட்டுப்பாடு; மீறினால் 1000 றியால் தண்டம்: ஓமானில் அறிவிப்பு

🕔 April 9, 2023

மான் நாட்டு பள்ளிவாசல்களின் வெளி ஒலிபெருக்கிகளில் ‘அதான்’ (தொழுகைக்கான அழைப்பு) மட்டுமே சொல்ல முடியும் என, அந்த நாட்டின் மத விவகாரங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த கட்டுப்பாட்டினை மீறும் பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கு 1000 ஓமான் றியால்கள் (இலங்கைப் பெறுமதியில் 83ஆயிரம் ரூபா) வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமான் நாட்டின் மத விவகார அமைச்சர் டொக்டர் முகமது பின் சயீத் பின் கல்ஃபான் அல்-மாமரி, பள்ளிவாசல்களுக்கான திருத்தியமைக்கப்பட்ட விதிமுறைகளை இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.

அமைச்சு வெளியிட்டுள்ள விதிகளின் படி, பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்களின் வெளிப்புற ஒலிபெருக்கிகள், வணக்கத்துக்கான அழைப்பை விடுப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்