05 நாட்களில் 25 பேர் வாகன விபத்துக்களில் பலி: இளம் சாரதிகள் தொடர்பில் பெற்றோர் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை

🕔 April 9, 2023

வாகன விபத்துக்களில் குறைந்தது 25 பேர் – கடந்த ஐந்து நாட்களில் பலியானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் பதிவாகிய 265 வாகன விபத்துக்களிலேயே 25 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

“கடந்த ஐந்து நாட்களில் 25 இறப்புகள் பதிவாகியுள்ளன. இளம் சாரதிகளின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

எதிர்வரும் தமிழ் – சிங்கள புதுவருடம் மற்றும் நோன்புப் பெருநாள் பண்டிகளைகளின் போது, வாகனங்களை அவதானத்துடன் செலுத்துவது, வீதி விபத்துக்களைத் தவிர்க்க உதவும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்