ஐஎம்எப் நிதியை ரூபாவாக மாற்றி உள்நாட்டில் பயன்படுத்த முடியும்: மத்திய வங்கி ஆளுநர்

🕔 March 22, 2023

ர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (ஐஎம்எப்) கிடைக்கும் நிதியை ரூபாவாக மாற்றி, உள்நாட்டு தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுகக்கு வழங்கிய பேட்டியில், அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

“வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான ஒரு மைல்கல்லாக சர்வதேச நாணய நிதிய உதவியைக் கருதலாம்.

இருந்தபோதிலும், நீண்டகால பொருளாதார நிலைத்தன்மையை அடைவதற்கு, அனைத்து தரப்பினரும், அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்” எனவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்