நிதியமைச்சின் செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் இரண்டு தாக்கல்

🕔 March 21, 2023

நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தி இன்று ( 21) உச்ச நீதிமன்றில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய சிறிவர்தன செயற்படத் தவறியதாக குற்றம் சுமத்தி தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இதேபோன்று, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட வரவு – செலவுத் திட்ட நிதியை, நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் தடுத்து வைப்பதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவைகடந்த 03 ஆம் திகதி, மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் பிறப்பித்தனர்.

ஆனால், இதுவரை தேர்தலுக்கான நிதியை நிதியமைச்சின் செயலாளர் விடுவிக்கவில்லை.

எனவே, முன்னர் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவின் பேரில், நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மற்றொரு உத்தரவை பிறப்பிக்குமாறு உச்ச நீதிமன்றத்தை மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்