கடன் வசதி தொடர்பான ஏற்பாட்டுக்கு, சர்வதேச நாணய நிதிய செயற்குழுவின் அனுமதியை இலங்கை பெற்றது

🕔 March 20, 2023

நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் – இலங்கையின் வேலைத் திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அங்கிகாரம் வழங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து 07 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை இலங்கை பெற இத்திட்டம் உதவும்.

அரசாங்கத்தின் பல் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், கடன் நிலைத்தன்மையை அடையவும் அரசாங்கம் முயற்சித்து வரும் நிலையில், இது ஒரு வரலாற்று மைல்கல்லாக அமைகிறது.

இந்த மாத தொடக்கத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைக்கு அமைவாக, இலங்கைக்கு பெரிஸ் கழகம், சீனா, இந்தியா உள்ளிட்ட அதன் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களின் நிதி உத்தரவாதம் கிடைத்தது.

சர்வதேச நாணய நிதியத்துக்கு செயற்குழுவைக் கூட்டி இலங்கையின் கடனுக்கான கோரிக்கையை பரிசீலிக்கும் வகையில் இந்த அனுமதி கிடைத்துள்ளது.

முன்னெப்போதும் இல்லாத சவால்களில் இருந்து பொருளாதாரத்தை மீட்பதற்கும், அனைத்து பங்குதாரர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு தேவையான கொள்கை ரீதியான ஏற்பாடுகள் இந்த திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.

(ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்