மின்சார கட்டண உயர்வை எதிர்த்து, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

🕔 March 10, 2023

பெப்ரவரி மாதம் அமுல்படுத்தப்பட்ட மின்சார கட்டண உயர்வை எதிர்த்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க – உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஜனக ரத்நாயக்க விடுத்துள்ள அறிக்கையில், மின்சார நுகர்வோர் என்ற ரீதியிலும் பொதுநலன் கருதியும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நிறுவப்பட்ட சட்ட நடைமுறைகளுக்கு மாறாக இலங்கை மின்சார சபையால் முன்மொழியப்பட்ட கட்டண உயர்வை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகரித்ததாகக் கூறப்படும் செயல்முறைக்கு ரத்நாயக்க சவால் விடுத்துள்ளார்.

இரண்டாவதாக, கட்டண மாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்கும் போது அனைத்து குடிமக்களின் நலன்களும் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்ய பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கடமைப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் அவர் சவால் விடுத்துள்ளார்.

இதேவேளை புதிய கட்டண உயர்வானது – குறைந்த அளவிலான மின்சார நுகர்வு அலகுகளில் உள்ளவர்களுக்கு நியாயமற்ற வகையில் உள்ள என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தனது மனுவில், சில நுகர்வோர் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை கொள்வனவு செய்வது நியாயமற்றது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்