ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் கண்டெடுப்பு: பொலிஸாரின் சந்தேகமும் வெளியானது

🕔 March 7, 2023

வுனியா குட்ஷெட் வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் இன்று (07) மீட்கப்பட்டுள்ளன.

42 வயதுடைய நபரொருவர், அவரின் 36 வயதுடைய மனைவி மற்றும் 09 மற்றும் 03 வயதுடைய இரண்டு மகள்கள் ஆகியோரே உயிரிந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி கணவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குழந்தைகளின் சடலங்கள் வீட்டினுள் இரண்டு நாற்காலிகளிலும், மனைவியின் சடலம் படுக்கையறையிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்