நீதிமன்ற உத்தரவை செய்தியாக்கியமைக்காக அச்சுறுத்தல்: வழக்கு ஒன்றின் சந்தேக நபரான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பௌசான் என்பவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

🕔 February 25, 2023

நீதிமன்ற உத்தரவை செய்தியாக்கியமைக்காக ‘புதிது’ செய்தித்தளத்தின் ஆசிரியரை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதோடு, ‘பேஸ்புக்’கில் அவதூறாகவும் எழுதியுள்ள அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எச்.எம். பௌசான் என்பவருக்கு எதிராக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர், பெண் ஒருவரின் படங்களை ‘பேஸ்புக்’கில் வெளியிடப் போவதாக அச்சுறுத்தி – கப்பம் கோரினார் எனும் குற்றச்சாட்டில் கைதாகி – விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்து, அண்மையில் நிபந்தனையுடனான பிணையில் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டார்.

கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி மேற்படி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, காரைதீவு பொலிஸாரால் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட மேற்படி சந்தேக நபரை, 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு டிசம்பர் 21ஆம் திகதி உத்தரவிடப்பட்டது.

விளக்க மறியல் காலம் முடிந்து மீண்டும் சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை தொடர்ச்சியாக மேலும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் கடந்த ஜனவரி 04ஆம் திகதி உத்தரவிட்டார்.

இதன் பின்னர் கடுமையான நிபந்தனைகளுடன் சந்தேக நபருக்கு பிணை வழங்கப்பட்டது.

மீண்டும் தொடங்கினார்

குறித்த பௌசான் எனும் நபரை பொலிஸார் கைது செய்த போது, அவரின் செயற்பாட்டில் இருந்த ‘ பேஸ்புக் ‘ கணக்குகளை, அவர் நிறுத்தி வைத்திருந்தார்.

ஆயினும், இப்போது அவர் தனது பெயரிலும், வேறு சில போலி ‘ பேஸ்புக் ‘ கணக்குள் மூலமாகவும் மீண்டும் பொதுமக்களுக்கு அவதூறுகளை எழுதத் தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் ‘ புதிது’ செய்தியாசிரியருக்கு இவர் ‘ பேஸ்புக்’ மூலமாக அவதூறு எழுதியுள்ளதோடு, பொது இடங்களில் புதிது ஆசிரியருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் நடந்துள்ளார்.

இதனையாடுத்து இன்று (25) அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் மேற்படி சந்தேக நபர் பௌசான் என்பவருக்கு எதிராக, ‘புதிது’ செய்தித்தள ஆசிரியர் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதேவேளை, காரைதீவு பொலிஸாரிடமிருந்து கிடைத்த தகவல்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு, சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை செய்திகளாக வெளியிட்ட ‘புதிது’ செய்தித்தள ஆசிரியருக்கு எதிராக, அந்த வழக்கின் சந்தேக நபர் – இவ்வாறு நடந்து கொண்டுள்ளமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை – காரைதீவு பொலிஸாருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னைய சம்பவங்கள்

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பௌசான் எனும் மேற்படி சந்தேக நபர், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ‘ பேஸ்புக்’ ஊடாக அவதூறு எழுதி வருவதாக பொலிஸ் நிலையங்களில் பல்வேறு முறைப்பாடுகள் உள்ளன.

அட்டாளைச்சேனை கமநல நிலையத்தில் கமநல அதிகாரியாக கடமையாற்றிய ஏ.எல். அஷ்ரப் என்பவருக்கு ‘பேஸ்புக்’ மூலம் அவதூறு எழுதினார் எனும் குற்றச்சாட்டில், பௌசான் எனும் மேற்படி நபருக்கு எதிராக, அஷ்ரப் என்பவர் அக்கரைபப்பற்று மாவட்ட நீதிமன்றில் மானநஷ்ட வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

அந்த வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 01ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது.

03 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி, பௌசான் என்பவருக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று அட்டாளைச்சேனையைச் சேர்ந்த கே.எம். முபீஸ் எனும் கிராமசேவை உத்தியோகத்தருக்கு ‘பேஸ்புக்’ மூலமாக அவதூறு எழுதினார் எனும் குற்றச்சாட்டிலும், பௌசான் எனும் நபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவதூறு வழுதுவதை தொழிலாகக் கொண்டுள்ளார்

‘பேஸ்புக்’ ஊடாக வெறுப்பு பேச்சுக்களை (Hate speech) வெளியிடுதல், நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்துப் பெண்களுக்கும் அவதூறுகளை எழுததல், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பொய்யான இட்டுக்கட்டப்பட்டுள்ள விடயங்களை குறிப்பிடுதல் போன்ற சமூக விரோத செயற்பாடுகளில் மேற்படி பௌசான் என்பவர் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகின்றார்.

இந்த நிலையில் சமூக செயற்பாட்டு அமைப்பொன்று மேற்படி பௌசான் என்பவரின் மேற்படி சமூக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஒன்றினை எடுப்பதற்கும் தயாராக வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்திகள்

01) பெண்ணின் படங்களை வெளியிடப் போவதாக மிரட்டி, பணம் பறித்த அட்டாளைச்சேனை ஆசாமிக்கு விளக்க மறியல்

02) அரச ஊழியர்களை அச்சுறுத்தியமை, அவதூறு எழுதியமை உள்ளிட்ட பல குற்றங்கள்: விளக்க மறியல் ஆசாமி பௌசானுக்கு எதிராக ஏற்கனவே பல வழக்குகள்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்