புத்தள, வெல்லவாய பகுதிகளில் மீண்டும் நில அதிர்வு

புத்தல, வெல்லவாய பகுதிகளில் இன்று முற்பகல் மீண்டும் சிறு நில அதிர்வொன்று ஏற்பட்டுள்ளதாக புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இது ரிக்டர் அளவீட்டு கருவியில் 3.3 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது.
வெல்லவாயவை அண்மித்த பகுதியில், 7 கிலோமீற்றர் ஆழத்தில், இலங்கை நேரப்படி 11.44 அளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லையென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 10 ஆம் திகதி இலங்கையின் தென்கிழக்கு நகரங்களில் 3.0 மெக்னிடியூட் அளவில் சிறிய நில அதிர்வு ஏற்பட்டது. எனினும் அதனால் எந்த ஆபத்துகளும் ஏற்பட்டிருக்கவில்லை.
இது ‘ஓர் அதிர்வு மட்டுமே, பூகம்பம் அல்ல’ என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் அறிக்கையில் தெரிவித்ததது.