கிழக்கு மாகாண சபை செயலாளராக நிர்வாக சேவை சிரேஷ்ட அதிகாரி சம்மாந்துறை நசீர் நியமனம்

🕔 February 22, 2023

கிழக்கு மாகாண சபையின் செயலாளராக இலங்கை நிருவாக சேவை சிரேஷ்ட அதிகாரி எம்.எம். நசீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநரிடமிருந்து நேற்று நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட இவர், இன்று (22) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

சம்மாந்துறையைச் சேர்ந்த இவர் – வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய நிலையில், கிழக்கு மாகாண சபை செயலாளராக நியமனம் பெற்றுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையில் விசேட தரத்தைக் கொண்ட நசீர், பிரதேச செயலாளராக பல இடங்களில் பணியாற்றியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்