ஐ.தே.கட்சியின் 1137 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கம்

🕔 February 21, 2023

க்கிய தேசியக் கட்சியின் பல உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அந்தக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படடுள்ளனர்.

அந்த வகையில் 1,137 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் இவ்வாறு கட்சியின் அங்கத்துவத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளித்தமையின் காரணமாக அவர்களின் கட்சி உறுப்புரிமைகளை இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

இவ்வாறு நீக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையான உறுப்பினர்கள், இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் – பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிடுகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்