வாக்குச் சீட்டுக்களை அச்சிட வேண்டியது, அரச அச்சகத்தின் கடமை: தேர்தல் திணைக்களம்

🕔 February 16, 2023

தேர்தலுக்கான வாக்கு சீட்டுக்களை அச்சிட வேண்டியது அரச அச்சகத்தின் கட்டாய கடமை என தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

முன்னர் எந்த சந்தர்ப்பத்திலும் வாக்கு சீட்டுக்களை அச்சிடுவதற்காக நிதி வழங்குமாறு அரச அச்சகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டதில்லை என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் இதனைக் கூறியுள்ளார்.

அரசின் பங்குதாரராக அரச அச்சகமும் செயற்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“தேர்தலை நடத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

எனவே அதற்கான வாக்கு சீட்டுக்களை அச்சிட வேண்டியது அரச அச்சகத்தின் கட்டாய செயற்பாடாகும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், இந்த முறை வாக்கு சீட்டு அச்சிடுவதற்காக நிதி கோருகின்றமை ஏற்றுக் கொள்ள முடியாத செயற்பாடாகும் என தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்