இலங்கை சாரதிகள் பற்றிய தகவல் பால் ரீதியில் வெளியீடு: 10 வருடத்தில் பெண்கள் தொகையில் பாரிய மாற்றம்

🕔 February 13, 2023

லங்கையில் 12.7 மில்லியனுக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட சாரதிகளில், 11 லட்சத்து 22,418 பேர் மட்டுமே பெண்கள் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 2,082 பெண்கள் கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் வசந்த ஆரியரத்னே கூறியுள்ளார்.

டிசம்பர் 31, 2010 நிலவரப்படி, இலங்கையில் 23,488 பெண்கள் மட்டுமே சாரதி உரிமைப் பத்திரங்களைப் பெற்றிருந்தனர். ஆனால் 2020 டிசம்பர் 31இல், சாரதி உரிமைப் பத்திரங்களைப் பெற்றுள்ள பெண்களில் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி 10 வருடங்களில், 09 லட்சத்து 43,749 பெண்கள் சாரதி அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமையின் கீழ் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்