உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்தி வைப்பு: திட்டமிட்டபடி தேர்தலை நடத்த ஆணைக்குழுவுக்கு அனுமதி

🕔 February 10, 2023

ள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை பிற்போட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் – ஓய்வுபெற்ற கேர்ணல் டப்ளிவ்.எம்.ஆர். விஜேசூரிய தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றில் இன்று (10) இடம்பெற்றது.

தேர்தலைப் பிற்போடும் நீதிப்பேராணையை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குப் பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தேசிய தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டபடி நடத்துவதற்கு  முன்னதாக உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க தேசிய தேர்தல் ஆணையம் கடமைப்பட்டுள்ளது என்றும் இதன்போது உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.

மேலும், உள்ளூராட்சி சபைத் தேர்தலை சட்டப்படி நடத்துவதற்கு தேசிய தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதால், இந்த விவகாரத்தில் உத்தரவுகள் தேவையில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

உச்ச நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்