மனு விசாரணைக்கு எடுக்கப்படும் வரை, மின் வெட்டு இல்லை: நீதிமன்றில் மின்சார சபை உறுதி

🕔 February 2, 2023

மின்சாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்துள்ள மனுவை – நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கும் வரை, மின்வெட்டை அமுல்படுத்தப் போவதில்லை என உச்ச நீதிமன்றுக்கு இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளது.

இந்த வழக்கு நாளை (பிப்ரவரி 03) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின் தலைவர் மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோருக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின் தலைவர் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோர் – 2023 ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17 வரையான உயர்தரப் பரீட்சைக்கான காலப்பகுதியில் தொடர்ச்சியான மின் விநியோகம் வழங்குவதாக ஆணைக்குழுவில் சமர்பித்த தீர்வை நிறைவேற்றத் தவறியுள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழு தனது மனுவில் தெரிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க, உயர் தரப் பரீட்சை நிறைவடையும் தினமான பெப்ரவரி 17 வரை, மின் வெட்டுக்கு தாம் அனுமதி வழங்கவில்லை என, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்