அமெரிக்காவின் முக்கிய ராஜதந்திரி இலங்கையில்: ஜனாதிபதியையும் சந்தித்தார்

🕔 February 1, 2023

மெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணை ராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலாண்ட் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

இன்று இலங்கை வந்தடைந்த விக்டோரியாவை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் வரவேற்றார்.

அமெரிக்க – இலங்கை ராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், விக்டோரியாவின் விஜயம் அமையும் என தூதுவர் சுங் கூறியுள்ளார்.

பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கையின் தற்போதைய சீர்திருத்தங்களுக்கும் அமெரிக்காவின் ஆதரவை வழங்கும வகையில் விக்டோரியாவின் விஜயம் அமையும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் இன்று (1) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கலந்துரையாடலின் போது, கடினமான காலங்களில் அமெரிக்க அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்ததாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் தொடர்ச்சியான மீண்டெழும் முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவை வழங்கும் என, இதன்போது விக்டோரியா நுலாண்ட் உறுதியளித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்