தலைப்புச் செய்திகள்

முன்னாள் அமைச்சர், ஆளுநர் ரெஜினோல்ட் குரே மரணம்: வேட்பாளர் தெரிவு கலந்துரையாடலின் போது, திடீர் சுகயீனம் ஏற்பட்டதாக தகவல்

முன்னாள் மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார். இவருக்கு 75 வயதாகிறது.

நேற்று (12) இரவு வாதுவையில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் – திடீர் சுகயீனமடைந்ததையடுத்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் அம்பியுலன்ஸ் மூலம் களுத்துறை பொது வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு, வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோதே அவருக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கலந்துரையாடலில் தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் குழுவும் கலந்துகொண்டனர்.

ரெஜனோல்ட் குரோ – நாடாளுமன்ற உறுப்பினர், அமைசர் பதவிகளையும் வகித்துள்ளார்.

மேல் மாகாண முதலமைச்சராகவும் (2000 -2005) பதவி வகித்துள்ளார். அத்துடன், 2016 பெப்ரவரி 14 இல் – இவர் வடக்கு மாகாணத்தில்  ஆளுனராகவும் நியமிக்கப்பட்டார்.

அதன்பின்னர், சில காலம் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.